மாவனெல்லை கிராம உத்தியோகத்தருக்கு அழைப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: மாவனெல்லையில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தருக்கு ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 24-01-2020 | 3:37 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மாவனெல்லை பிரதேசத்தில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தர் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நேற்று இரண்டாவது நாளாகவும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கினார். ஆணைக்குழுவினால் இன்றைய தினமும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இதுவரை 47 பேரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது. மேலும், 420-இற்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.