சீனாவின் வுஹானில் வசிக்கும் இலங்கை மாணவர்களுக்கு கொரோனோ பாதிப்பில்லை

சீனாவின் வுஹானில் வசிக்கும் இலங்கை மாணவர்களுக்கு கொரோனோ பாதிப்பில்லை

சீனாவின் வுஹானில் வசிக்கும் இலங்கை மாணவர்களுக்கு கொரோனோ பாதிப்பில்லை

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2020 | 4:17 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் வசிக்கும் இலங்கை மாணவர்கள் சிறந்த சுகாதார நிலையில் உள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பீஜீங்கில் உள்ள இலங்கை தூதரகத்திடம் அங்குள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அங்குள்ள மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 இலங்கை மாணவர்கள் சீனாவின் வுஹான் நகரில் உயர் கல்வியை தொடர்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் முதலாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரின் செயற்பாடுகள் அனைத்தும் அந்நாட்டு அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்