சட்டவிரோத முகவர்களை சுற்றிவளைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது: வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2020 | 3:48 pm

Colombo (News 1st) சட்டவிரோத வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களை சுற்றிவளைக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி முகாமையாளர் கீர்த்தி முத்துக்குமாரண தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் சட்டவிரோதமான முறையில் செயற்பட்ட 252-க்கும் அதிக வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தொடர்பிலான தகவல்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை காரியாலயம் அல்லது பிரதேச அலுவலகங்களிடம் வழங்க முடியும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்