உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நியமனம்: அரசியலமைப்பு பேரவை அனுமதி

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நியமனம்: அரசியலமைப்பு பேரவை அனுமதி

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நியமனம்: அரசியலமைப்பு பேரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2020 | 7:40 pm

Colombo (News 1st) உயர் நீதிமன்றத்திற்கான புதிய நீதியரசர் ஒருவரை நியமிப்பதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பு பேரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடியது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், தலதா அத்துக்கோரல, சிவில் அமைப்பின் உறுப்பினர்களான என்.செல்வகுமார், ஜாவிட் யூசுப் ஆகியோர் இன்றைய பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சட்டத்தரணி யசந்த கோத்தாகொடவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதிபதி A.H.M.D. நவாஸை நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இவர்கள் இருவரினதும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்