19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2020 | 7:43 am

Colombo (News 1st) 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

தென்னாபிரிக்காவின் Bloemfontein மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்​கை இளையோர் அணி சார்பாக நவோத் பரணவிதாரண 23 ஓட்டங்களை பெற்றார்.

கமில் மிஷார 21 ஓட்டங்களையும் கவிந்து கஹவதுஹராய்ச்சி 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்வரிசையில் சொனால் தினூஷ 46 ஓட்டங்களை பெற்றார்.

அஹான் விக்கிரமசிங்க 48 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களை பெற்றது.

ஆதித்யா அஷோக் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து இளையோர் அணி சார்பாக Rhys Mariu 86 ஓட்டங்களை பெற்றார்.

Beckham Wheeler 80 ஓட்டங்களை பெற்றார்.

இறுதி 2 பந்துகளில் நியூசிலாந்து இளையோர் அணியின் வெற்றிக்காக 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இதன்போது டில்ஷான் மதுஷங்கவின் பந்துக்கு சிக்சர் விளாசிய Kristian Clarke நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்