சீனாவில் பொதுப்போக்குவரத்திற்கு தடை

சீனாவில் பொதுப்போக்குவரத்திற்கு தடை

by Staff Writer 23-01-2020 | 8:23 AM
Colombo (News1st) சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பொதுப்போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வுஹான் நகரில் சுமார் 9 மில்லியன் மக்கள் வசித்துவரும் நிலையில், அங்கிருந்து எவரையும் வௌியேற வேண்டாமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். Lunar புதுவருட விடுமுறையை முன்னிட்டு மில்லியன் கணக்கான சீனர்கள் ஒருவார விடுமுறையில் வௌியிடங்களுக்குப் பயணிப்பது வழக்கம் என்ற நிலையிலேயே இந்தத் தடை அமுலுக்கு வந்துள்ளது. வுஹான் நகரில் வேகமாகப் பரவிய ​கொரோனா வைரஸ், தற்போது சீனாவின் ஏனைய பகுதிகளிலும் பரவலடைந்துள்ளது. இங்கு 500 இற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதுடன், 17 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், அமெரிக்கா உள்ளிட்ட வேறு சில நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸானது இதற்கு முன்னர் எவரையும் பாதித்திருக்கவில்லை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.