வவுனியா – புதிய சாலம்பைக்குளத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டை அகற்றுமாறு மக்கள் போராட்டம்

வவுனியா – புதிய சாலம்பைக்குளத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டை அகற்றுமாறு மக்கள் போராட்டம்

வவுனியா – புதிய சாலம்பைக்குளத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டை அகற்றுமாறு மக்கள் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2020 | 7:41 pm

Colombo (News 1st) வவுனியா – புதிய சாலம்பைக்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டினை அகற்றுமாறு கோரி பிரதேச மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குப்பை கொட்டப்படும் இடத்திற்கு செல்லும் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் உள்ள குப்பைகளை சாலம்பைக்குளம் கிராமத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் தாம் நோய்வாய்ப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தினால் வவுனியாவில் நேற்றும் இன்றும் குப்பைகள் அகற்றப்படவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் சாலம்பைக்குளம் போராட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று முதல் குப்பைகளை அகற்றும் பணிகள் ஸ்தம்பித்துள்ளதால், டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக வவுனியா நகர சுகாதார உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்