மருத்துவ பீட மாணவி கொலை: கணவருக்கு விளக்கமறியல்

யாழில் மருத்துவ பீட மாணவி கொலை: கணவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 23-01-2020 | 4:41 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் மருத்துவ பீட மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட யுவதியின் கணவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ். பண்ணை கடற்கரையில் நேற்று (22) பிற்பகல் இந்த கொலை இடம்பெற்றது. யாழ். பண்ணை கடற்கரையில் பல்கலைக்கழக மாணவி கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது சடலம் நீரில் மூழ்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டது. சந்தேகநபர் பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்