குப்பை கொட்டுவதற்கு எதிரான மனு விசாரணைக்கு

முத்துராஜவெலயில் குப்பை கொட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க தீர்மானம்

by Staff Writer 23-01-2020 | 2:01 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களுக்குரித்தான குப்பைகளை முத்துராஜவெலயில் கொட்டுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்மானித்துள்ளது. முத்துராஜவெல சூழலைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் பிரதேச மக்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி மனு மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. சிசிர டி ஆப்ரூ, பி பத்மன் சூரசேன மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏனைய செய்திகள்