பிடியாணையைப் பெற்று கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்புரை

பிடியாணையைப் பெற்று கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்புரை

பிடியாணையைப் பெற்று கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2020 | 6:56 pm

Colombo (News 1st) நீதிமன்ற பிடியாணையைப் பெற்று மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவானாகக் கடமையாற்றிய காலப்பகுதியில், நீதிமன்ற விசாரணையில் காணப்பட்ட வழக்கு ஒன்று தொடர்பில் அப்போதைய இராஜாங்க அமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய குற்றச்சாட்டில் சட்ட மா அதிபரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொய் சாட்சியத்தை உருவாக்கிய குற்றச்சாட்டின் கீழ் கிஹான் பிலப்பிட்டிய மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சட்ட மா அதிபரால் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்