பமீலா அண்டர்சன் ஐந்தாவது திருமணம்

பமீலா அண்டர்சன் ஐந்தாவது திருமணம்

பமீலா அண்டர்சன் ஐந்தாவது திருமணம்

எழுத்தாளர் Bella Dalima

23 Jan, 2020 | 3:45 pm

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா அண்டர்சன் 74 வயது தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை 5 ஆவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா அண்டர்சன், பல்வேறு படங்களில் நடித்துள்ள இசைக்கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அவரிடம் இருந்து 1998 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 2006 ஆம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே இருவரும் பிரிந்தனர். 2014 ஆம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பமீலா அண்டர்சன் அடுத்து ‘பேட்மேன்’ உட்பட பல படங்களைத் தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) காதலித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்னர் அவரை முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். கலிபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் கடந்த திங்கட்கிழமை (20) எளிமையாக நடந்துள்ளது. பமீலாவும் ஜான் பீட்டரும் முப்பது வருடங்களுக்கு முன் முதன்முறையாக டேட்டிங் சென்றனர். இப்போது தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திருமணம் பற்றி பமீலா அண்டர்சன் கூறும்போது, நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்கள் காதல் ஒப்பிடமுடியாதது என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்