ஜயம்பதி விக்ரமரத்னவின் பதவி வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய நியமனம் 

ஜயம்பதி விக்ரமரத்னவின் பதவி வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய நியமனம் 

ஜயம்பதி விக்ரமரத்னவின் பதவி வெற்றிடத்திற்கு சமன் ரத்னபிரிய நியமனம் 

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2020 | 9:16 am

Colombo (News 1st) வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட சமன் ரத்னபிரியவின் பெயர், இன்று (23) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படவுள்ளது.

கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு சமன் ரத்னபிரிய பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜயம்பதி விக்ரமரத்னவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்