ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது

ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது

ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2020 | 11:12 am

Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் வௌியேறும் நுழைவாயில் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 5 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் காலியைச் சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்