இலங்கை போக்குவரத்து சபை மீதான முறைப்பாட்டை விசாரிக்க குழு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபை மீதான முறைப்பாட்டை விசாரிக்க குழு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபை மீதான முறைப்பாட்டை விசாரிக்க குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2020 | 12:45 pm

Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபை மற்றும் அதன் கீழுள்ள டிப்போக்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் பொது மக்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் மேலதிக திட்டச் செயலாளர், திலக்கரத்ன பண்டாவின் தலைமையில் 3 உறுப்பினர்கள் அடங்கிய குழு விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் நயோமி ஜயவர்தன, சட்ட அதிகாரி பிரியந்தி குணசேகர மற்றும் உள்ளக கணக்காய்வு அதிகாரி V.K.H. கோலித ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாவர்.

முறைகேடுகள் மற்றும் முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்