உணவுகளின் போஷாக்குத் தரத்தை அளவிடும் வேலைத்திட்டம்

உணவுகளின் போஷாக்குத் தரத்தை அளவிடும் வேலைத்திட்டம்

by Staff Writer 22-01-2020 | 8:06 AM
Colombo (News 1st) இலங்கையில் 50 பொதுவான உணவு வகைகளின் போஷாக்குத் தரத்தை அளவிடுவதற்காக, சர்வதேச மட்டத்தில் விசேட ஆய்வறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக, 50 உணவுப் பொருட்களைத் தெரிவுசெய்து அவற்றில் அடங்கியுள்ள போஷாக்கு மற்றும் இரசாயனப் பொருட்கள் தொடர்பான நிலைமைகள் கண்டறியப்படவுள்ளன. சிவப்பு நாட்டரிசி, வெள்ளை அரிசி, நாட்டரிசி மற்றும் சம்பா போன்ற அரிசி வகைகள், மீன் வகைகள், காய்கறிகள், கருவாடு, பழங்கள், தேங்காய், எண்ணெய் வகைகள் போன்ற உணவு வகைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆய்வு அறிக்கையை எதிர்வரும் மே மாத இறுதிக்கு முன்னர் பெற்றுக்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.