அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 22-01-2020 | 12:50 PM
Colombo (News 1st) அமைதியைத் தொடர்ந்தும் பேணுவதற்கு நாடளாவிய ரீதியில் முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று (22) முதல் ஒரு மாதத்திற்கு அமுலாகும் வகையில் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் இந்த அதிவிசேட வர்த்தமானி ஏற்கனவே வௌியிடப்பட்டது. ஒரு மாதத்தின் பின்னர், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதனை நீடித்தார். கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.