விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையாக 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையாக 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையாக 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2020 | 2:29 pm

Colombo (News 1st) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட 19,394 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக பட்சமாக ஏக்கருக்கு 40,000 ரூபா வரையில் இழப்பீடு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்த முடியாத இயற்கை பேரழிவுகளால் சேதமடைந்த நெல், சோளம், சோயா, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இதன் கீழ் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியான அனைத்து விவசாயிகளும் இன்று (22) முதல் வங்கிகளிடமிருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24ஆம் திகதிக்குள் இழப்பீடு பெறாத விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் அலுவலகத்திற்கு முறையீடு செய்ய முடியும் எனவும் சபை அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்