யாழ். மருத்துவ பீட மாணவி கழுத்து வெட்டி கொலை: இராணுவ சிப்பாய் கைது

யாழ். மருத்துவ பீட மாணவி கழுத்து வெட்டி கொலை: இராணுவ சிப்பாய் கைது

யாழ். மருத்துவ பீட மாணவி கழுத்து வெட்டி கொலை: இராணுவ சிப்பாய் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2020 | 3:46 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் மருத்துவ பீட மாணவி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். பண்ணை கடற்கரையில் குறித்த பல்கலைக்கழக மாணவி கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது சடலம் நீரில் மூழ்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவிக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையிலான காதல் தொடர்பே கொலைக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்