பாராளுமன்ற நடவடிக்கை, உயர் பதவிகளுக்கான தெரிவுக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம் 

பாராளுமன்ற நடவடிக்கை, உயர் பதவிகளுக்கான தெரிவுக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம் 

பாராளுமன்ற நடவடிக்கை, உயர் பதவிகளுக்கான தெரிவுக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம் 

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2020 | 5:33 pm

Colombo (News 1st) பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழு மற்றும் உயர் பதவிகளுக்கான தெரிவுக்குழு போன்றவற்றின் உறுப்பினர் நியமனத்திற்கு இன்று பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுவின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்படவுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக பிரதி சபாநாயகர் ஜே.எம். ஆனந்த குமாரசிறி, குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, சமல் ராஜபக்ஸ, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த சமரசிங்க, W.D.J. செனவிரத்ன, மஹிந்தானந்த அளுத்கமகே, வாசுதேவ நாணயக்கார, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன், உதய கம்மன்பில, அஜித் பீ. பெரேரா மற்றும் M.A.சுமந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர் பதவிகளுக்கான தெரிவுக்குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஸ, ஆறுமுகன் தொண்டமான், பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரண, அனுர பிரியதர்ஷன யாப்பா, கெஹலிய ரம்புக்வெல்ல, விதுர விக்ரமநாயக்க மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்