டெஸ்ட் அரங்கில் முதல் கன்னி இரட்டைச்சதத்தை பதிவு செய்த அஞ்சலோ மெத்தியூஸ்

டெஸ்ட் அரங்கில் முதல் கன்னி இரட்டைச்சதத்தை பதிவு செய்த அஞ்சலோ மெத்தியூஸ்

டெஸ்ட் அரங்கில் முதல் கன்னி இரட்டைச்சதத்தை பதிவு செய்த அஞ்சலோ மெத்தியூஸ்

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2020 | 9:13 pm

Colombo (News 1st)  இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் அரங்கில் முதல்  கன்னி இரட்டைச்சதத்தை இன்று பதிவு செய்தார்.

சிம்பாப்வேவுக்கு எதிராக ஹராரேயில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.

4 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் 63 ஓட்டங்களைப் பெற்றனர்.

முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் பொறுமையாக துடுப்பெடுத்தாடி 468 பந்துகளில் இரடைச்சதம் விளாசினார்.

டெஸ்ட் அரங்கில் அவர் பதிவு செய்யும் முதல் கன்னி இரட்டைச்சதம் இதுவாகும்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் அரங்கில் சதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 515 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்