டெங்குக் காய்ச்சலால் 3,000 பேர் பாதிப்பு

டெங்குக் காய்ச்சலால் 3,000 பேர் பாதிப்பு

டெங்குக் காய்ச்சலால் 3,000 பேர் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2020 | 6:58 am

Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3,000 இற்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மிகக் குறைந்தளவானோரே டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலேயே டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெங்கு ஒழிப்புப் பணியகத்தின் கள ஆய்வு நடவடிக்கைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படுவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்