குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

குறை வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2020 | 2:00 pm

Colombo (News 1st) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான தொழிலைப் பெற்றுக் கொடுப்பதற்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலகங்களூடாக விநியோகிக்கப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளார்.

விண்ணப்பதாரிகளின் குடும்ப வருமானம் தொடர்பில் கிராம உத்தியோகத்தரின் சான்றுப்பத்திரம் அவசியமானது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கா.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றாத, அதற்கு கீழான கல்வித் தகமையைக் கொண்டவர்களுக்கு மாத்திரமே புதிய தொழில் வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்