உக்காத பொருட்களின் மீள் சுழற்சி தொடர்பில் இணக்கம்

உக்காத பொருட்களின் மீள் சுழற்சி தொடர்பில் இணக்கப்பாடு

by Staff Writer 22-01-2020 | 11:39 AM
Colombo (News 1st) மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உக்காத பொருட்களை மீள்சுழற்சி செய்வது குறித்து ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபை இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. 9 மாநகர சபை மேயர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. யோகட் கோப்பைகளை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஈயக்கடதாசிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் மேலுறைகளைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் S. அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் யோகட் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, பிளாஸ்டிக் போத்தல்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் தொடர்பிலும் தீர்வு காண்பதற்கு இந்தக் கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.