ரஞ்சனின் குரல் பதிவை கோரும் நீதிச்சேவை ஆணைக்குழு

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களை கோரும் நீதிச் சேவை ஆணைக்குழு

by Staff Writer 21-01-2020 | 2:31 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதித்துறையுடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களின் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிபதிகள், நீதித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க மேற்கொண்டுள்ள தொலைபேசி உரையாடல்களின் பிரதிகளை அனுப்புமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் காணப்படும் பட்சத்தில் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க, கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவில் நேற்று மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் வழங்கியிருந்தார். தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம், கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவு நேற்று முந்தினம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசார​ணை செய்து வாக்குமூலம் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சட்டமா அதிபரால் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்