சிரேஷ்ட ஊடகவியலாளர் A.R.M. ஜிப்ரி காலமானார்

by Staff Writer 21-01-2020 | 12:17 PM
Colombo (News 1st) காலஞ்சென்ற சிரேஷ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான அல் ஹாஜ் A.R.M. ஜிப்ரியின் ஜனாசா இன்று (21) மாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசலிலுள்ள மையவாடியில் இன்று மாலை ஜனாசா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்த அன்னாரின் ஜனாசா, இன்று அதிகாலை பாணந்துறையிலுள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பாணந்துறை பொதுசேவா மாவத்தையிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட A.R.M. ஜிப்ரியின் ஜனாசா அங்கிருந்து கல்முனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 60 வயதான அன்னார் இலங்கை ஊடகத்துறையில் மிக நீண்டகாலம் சேவையாற்றிய ஒருவராவார். பல பாடசாலைகளில் அதிபராக சேவையாற்றிய அன்னார், இறுதியாகக் களுத்துறை முஸ்ஸிம் மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.