பஸ்களைக் கண்காணிப்பதற்கு 50 குழுக்கள் நியமனம்

பஸ்களைக் கண்காணிப்பதற்கு 50 குழுக்கள் நியமனம்

by Staff Writer 21-01-2020 | 8:57 AM
Colombo (News 1st) பஸ்களில் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திம் வகையில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக 50 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் செயல்படும் வகையில் இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 250 உறுப்பினர்களை உள்ளடக்கி இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பஸ்களில் பாடல்களை இசைப்போருக்கு எதிராக கடும் நட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் 1955 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.