தடயவியல் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை

தடயவியல் கணக்கறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

by Staff Writer 21-01-2020 | 9:57 AM
Colombo (News 1st) மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இன்று (21) நண்பகல் 12.30 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெவுள்ளது. மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்கறிக்கையை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின் போது எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. தடயவியல் கணக்கறிக்கையை சபையில் சமர்பிப்பதற்கு சட்டமா அதிபரால் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சினில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரும்பட்சத்தில் அதனை சபையில் சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். சபாநாயகரின் தீர்மானத்திற்கு அமைய அதனை சமர்ப்பிக்க முடியும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். திருடர்களைத் தொடர்ந்தும் பாதுகாக்காது, உடனடியாக தடயவியல் கணக்கறிக்கையை பகிரங்கப்படுத்துமாறும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சினில் ஹந்துன்நெத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.