ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்தார் சஜித்

by Staff Writer 21-01-2020 | 8:40 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இன்று பிற்பகல் 3.45 அளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமானது. எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இங்கு அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.