ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2020 | 7:28 am

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்துத் தொகுதி அமைப்பாளர்களும் இன்று (21) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்கே இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தயார்படுத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழு இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றத்தில் கூடவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னிணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற வாரத்தில் மேற்கொள்ளக்கூடிய தீர்மானங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்