இலங்கையர் ஒருவருக்கு ஜெர்மனியில் சிறைத்தண்டனை

இலங்கையர் ஒருவருக்கு ஜெர்மனியில் சிறைத்தண்டனை

இலங்கையர் ஒருவருக்கு ஜெர்மனியில் சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2020 | 2:07 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் கொலை தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு ஜெர்மன் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனின் ஸ்டுட்கார்ட் பிராந்திய நீதிமன்றத்தினால் சந்தேகநபருக்கு 6 வருடங்களும் 10 மாதங்களுக்குமான சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் சிறைத்தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு குற்றவாளிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2012 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் புகலிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்