by Bella Dalima 21-01-2020 | 5:08 PM
Colombo (News 1st) இன்டர்போலின் (Interpol) முன்னாள் தலைவர் Meng Hongwei-க்கு 13 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக நீண்டகாலம் சேவையாற்றிய அவர் பதவிக்காலத்தின் போது 2,90,000 அமெரிக்க டொலரை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரத்தில் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
Meng Hongwei , 2016 இல் இன்டர்போலின் தலைவராக நியமிக்கப்பட்டதுடன், பிரான்ஸில் இருந்து சீனாவிற்கு சென்ற அவர் காணாமற்போனதைத் தொடர்ந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.