அஜித்திற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் – பிரசன்னா

அஜித்திற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் – பிரசன்னா

அஜித்திற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் – பிரசன்னா

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Jan, 2020 | 3:12 pm

நேர்கொண்ட பார்வையைத் தொடர்ந்து அஜித் குமாரின் நடிப்பில் ‘வலிமை’ எனும் படம் உருவாகி வருகின்றது.

தீபாவளிக்கு வௌியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வில்லனாக பிரசன்னா நடிப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

தான் வலிமை படத்தில் நடிக்கவேண்டும் என விரும்பிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரசன்னா, வலிமை படத்தில் நடிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அஜித்துடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு இம்முறை அமையவில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனால் வருத்தத்தில் இருந்த தான் மக்களின் அன்பினால் இன்னமும் வலிமை பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விரைவில் அமையும் என நம்புவதாக நடிகர் பிரசன்னா விளக்கமளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்