9 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் தந்திரிமலை

9 வருடங்களின் பின்னர் திறக்கப்படும் தந்திரிமலை

by Fazlullah Mubarak 20-01-2020 | 10:10 AM

வில்பத்து தேசிய சரணாலயத்தின் தந்திரிமலை மற்றும் மஹவிலச்சிய நுழைவாயில் சுமார் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு இதனை தீர்மானித்துள்ளது. வில்பத்து சரணாலயத்தில் புதிய பாலமொன்றை நிர்மாணிக்கவும் புதிய வீதிகளை அமைக்கவும் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவினால் ஆலோசனை வழங்கப்படுள்ளது. இதேவேளை, சரணாலயத்தை சூழவுள்ள ஹணுவில, குகுல் கட்டுவ, முசிங்ககம மற்றும் கடுபத்கம ஆகிய 4 வாவிகளும் புனரமைக்கப்படவுள்ளன.