by Staff Writer 20-01-2020 | 5:13 PM
Colombo (News 1st) தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களுடன் தொடர்புடைய நீதிபதிகளிடம் வாக்குமூலம் பெறுமாறு சட்டமா அதிபர் சமீபத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதற்கிணங்க, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் இன்று (20) பிற்பகல் 2 மணியளவில் முன்னாள் நீதிபதி பத்மினி ரணவக்க வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று நேற்று மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பில் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.