நிர்பயா வழக்கு - சீராய்வு மனு இன்று விசாரணைக்கு

நிர்பயா வழக்கு - சீராய்வு மனு இன்று உயர் நீதிமன்றத்தில்

by Fazlullah Mubarak 20-01-2020 | 9:59 AM

டில்லி மாணவி நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளியொருவர் தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று இந்திய உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குற்றவாளிகள் நால்வருக்கும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி காலை 6 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுமென, டெல்லி நீதிமன்றம் கடந்த வௌ்ளிக்கிழமை அறிவித்தது. இந்நிலையில் குற்றவாளியான பவன்குமார் குப்தா, உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற 2012 ஆம் ஆண்டு, தாம் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்குமாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது சட்டத்தரணி மோசடியான ஆவணங்களை தாக்கல் செய்ததுடன், தமக்கு ஆதரவாக வாதிடவில்லை எனவும் குற்றஞ்சுமத்தியுள்ளார். தூக்குத்தண்டனை திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிகள் தொடர்ச்சியாக மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.