கல்வி அமைச்சர் வழங்கியுள்ள ஆலோசனை

கல்வி அமைச்சர் வழங்கியுள்ள ஆலோசனை

by Staff Writer 20-01-2020 | 8:00 PM
Colombo (News 1st) அடுத்த வருடத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய சுற்றுநிருபமொன்றை வௌியிடுமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது அமுலிலுள்ள சுற்றுநிருபம் முழுநாட்டுக்கும் பொதுவான ஒன்றென்பதால், பிரதேச ரீதியில் நிலவும் காணிப் பிரச்சினை, அனுமதிப்பத்திரங்கள் மற்றும் காணி உறுதிகளை வழங்குவதில் நிலவும் தாமதம் என்பவற்றை கவனத்திற்கொண்டு 2021ஆம் ஆண்டுக்கான புதிய சுற்றுநிருபத்தை வௌியிடுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் நேர்முகத் தேர்வுக்காக கடந்த காலத்தில் கல்வி அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டிருந்த சுற்றுநிருபத்தில் நியாயமற்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.