by Staff Writer 20-01-2020 | 2:50 PM
Colombo (News 1st) கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கலிகமுவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவரும் ஆணொருவருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.