ஏப்ரல் தாக்குதல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

by Staff Writer 20-01-2020 | 3:51 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் மீதான விசாரணை இன்று (20) ஆரம்பமானது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையிலான 7 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகமாட்டார் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்சானா ஜமித் இதன்போது தெரிவித்துள்ளார். இந்த மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.