ஹம்பாந்தோட்டையில் குளங்கள், நீர்த்தேக்கங்கள் புனரமைப்பு

ஹம்பாந்தோட்டையில் குளங்கள், நீர்த்தேக்கங்கள் புனரமைப்பு

ஹம்பாந்தோட்டையில் குளங்கள், நீர்த்தேக்கங்கள் புனரமைப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2020 | 3:29 pm

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குளங்கள், நீர்த்தேக்கங்கள், ஓடைகள் மற்றும் விவசாயப் பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் குளங்கள், நீரோடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் வண்டல் மண்ணை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், சேதமடைந்த ஓடைகள் மற்றும் கால்வாய்களை மறுசீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விவசாய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்