இலங்கை கிரிக்கெட் அணியை 90 ஓட்டங்களால் வெற்றி கொண்ட இந்தியா

இலங்கை கிரிக்கெட் அணியை 90 ஓட்டங்களால் வெற்றி கொண்ட இந்தியா

இலங்கை கிரிக்கெட் அணியை 90 ஓட்டங்களால் வெற்றி கொண்ட இந்தியா

எழுத்தாளர் Fazlullah Mubarak

20 Jan, 2020 | 10:21 am

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 90 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் அணி தனது முதல் போட்டியில் நேற்று இந்தியாவை எதிர்கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணிக்கு வலுவான ஆரம்பம் கிடைத்தது.

யஷாஸ்வி ஜய்ஸ்வால் 59 ஓட்டங்களையும், அணித் தலைவர் பிரியாம் கார்க் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

துரு ஜூரெல் 52 ஓட்டங்களையும், சித்தெஷ் வீர் 44 ஓட்டங்ளையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

இந்திய இளையோர் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 297 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய இலங்கை இளையோர் அணியின் முதல் விக்கெட் 19 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

நவோத் பரணவிதான 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ரவிந்து ரசந்த 49 ஓட்டங்களையும். காமில் மிசார 39 ஓட்டங்களையும், அணித்தலைவர் நிபுன் தனஞ்சய 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை இளையோர் அணியால் 45 தசம் 2 ஓவர்களில்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்