ஆபிரிக்காவின் செல்வந்தப் பெண்மணி தொடர்பான ஆவணங்கள் வௌியாகின

ஆபிரிக்காவின் செல்வந்தப் பெண்மணி தொடர்பான ஆவணங்கள் வௌியாகின

ஆபிரிக்காவின் செல்வந்தப் பெண்மணி தொடர்பான ஆவணங்கள் வௌியாகின

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2020 | 3:39 pm

Colombo (News 1st) ஆபிரிக்காவின் செல்வந்தப் பெண்மணியான இஸபெல் டொஸ் சன்டோஸ் (Isabel dos Santos) வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் முறை தொடர்பான ஆவணங்கள் வௌியாகியுள்ளன.

அங்கோலா நாட்டைச் சேர்ந்த குறித்த பெண் தமது நாட்டு வளங்களைப் பயன்படுத்தியும் ஊழல் புரிந்தும் இலாபமீட்டிக் கொள்வதாக குறித்த ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

இவரின் தந்தை அங்கோலாவின் ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில் நிலம், எண்ணெய், வைரக்கல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த இலாமமீட்டக்கூடிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு சன்டோஸுக்கு அனுமதியளித்துள்ளார்.

சன்டோஸும் அவரது கணவரும் பெறுமதி மிக்க நாட்டின் வளங்களைக் கொள்வனவு செய்யவும் சர்ச்சைக்குரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்பதையும் இந்த ஆவணங்கள் வௌிக்கொணர்ந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்