அடுத்த வாரம் முதல் காலியில் தினமும் நீர்வெட்டு

அடுத்த வாரம் முதல் காலியில் தினமும் நீர்வெட்டு

அடுத்த வாரம் முதல் காலியில் தினமும் நீர்வெட்டு

எழுத்தாளர் Fazlullah Mubarak

20 Jan, 2020 | 10:13 am

காலி நகரில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் R.H. ருவனிஸ் கூறியுள்ளார்.

நிலவும் வறட்சியுடனான வானிலையால், காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வறட்சியுடனான வானிலை தொடர்ச்சியாக நிலவும் பட்சத்தில், அநுராதபுரம், கந்தளாய், பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்