மார்ச் முதல் ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டு விநியோகம்

மார்ச் முதல் ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டு விநியோகம்

மார்ச் முதல் ஒன்லைன் ஊடாக ரயில் பயணச்சீட்டு விநியோகம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Jan, 2020 | 1:15 am

Colombo (News 1st) எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ரயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ரயில் பயணச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து ரயில் நிலையங்களிலிருந்தும் பஸ் சேவைகளை ஆரம்பிப்பதற்காக ரயில் – பஸ் கூட்டுசேவை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், அனைத்து ரயில் நிலையங்களுக்கு அருகிலும் சுமார் 100 வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய தரிப்பிட வசதி உருவாக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்