பிக்காசோ ஓவியத்தை விற்க முயன்ற கோடீஸ்வரருக்கு சிறைத் தண்டனை

பிக்காசோ ஓவியத்தை விற்க முயன்ற கோடீஸ்வரருக்கு சிறைத் தண்டனை

பிக்காசோ ஓவியத்தை விற்க முயன்ற கோடீஸ்வரருக்கு சிறைத் தண்டனை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

19 Jan, 2020 | 11:54 am

Colombo (News 1st) ஏலத்தில் விற்பனை செய்வதற்காக பிக்காசோ (Picasso) ஓவியம் ஒன்றை கடத்த முயன்ற கோடீஸ்வரர் ஒருவருக்கு 18 மாத கால சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டு சட்டத்தின் பிரகாரம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் தேசிய சொத்தாக கருதப்படுகின்றது.

இந்த பொருட்களை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லும்போது, அதற்கான அனுமதியை அவற்றின் உரிமையாளர்கள், அரசிடம் பெற வேண்டும்.

1906 ஆம் ஆண்டு பிக்காசோவால் வரையப்பட்ட The Head of a Young Woman என்ற ஓவியம் தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 வயதான செல்வந்தர் ஜேமி போடின், இந்த ஓவியத்தை 1977 ஆம் ஆண்டு கொள்வனவு செய்தார்.

இந்நிலையில் லண்டனில் நடைபெறவிருந்த ஏலத்தில், இந்த ஓவியத்தை விற்பனை செய்வதற்கு அவர் முயற்சித்ததாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்