by Staff Writer 19-01-2020 | 8:06 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வேட்பாளர்களுக்கு சார்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்தமை, சட்டவிரோதமாக பதவிகள் வழங்கப்பட்டமை குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கல்வி அமைச்சு, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீனத் தொலைக்காட்சி உள்ளுட்ட அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் பின்னர் உரிய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.