கடனை செலுத்துவதற்காக மேலும் கடன் பெறும் மின்சார சபை

கடனை செலுத்துவதற்காக மேலும் கடன் பெறும் மின்சார சபை

கடனை செலுத்துவதற்காக மேலும் கடன் பெறும் மின்சார சபை

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2020 | 7:40 am

Colombo (News 1st) பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவேண்டிய கடன் தொகையை மீள செலுத்துவதற்காக மேலும் கடன் பெறுவற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அரச வங்கிகளூடாக கடனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

84 பில்லியன் ரூபா கடன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.

கடன் தொகையை செலுத்தத் தவறினால், எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்தல் விடுத்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்