by Staff Writer 18-01-2020 | 7:51 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், கொள்கை ரீதியாக அரசியல் பயணத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றமடையும் பட்சத்தில், மக்களின் நலன்கருதி பொது கொள்கையொன்றை முன்நிறுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கலந்துரையாடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றமடையவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
அவ்வாறான திட்டம் இல்லை என அவர் பதிலளித்தார்.