சஜித் பிரேமதாச - கரு ஜயசூரிய சந்திப்பு

சஜித் பிரேமதாச - கரு ஜயசூரிய சந்திப்பு

by Staff Writer 18-01-2020 | 6:52 PM
Colombo (News 1st)  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒரு மணித்தியாலம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி தொடர்பில் கட்சி தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.