விலகிச்சென்ற முப்படைகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

விலகிச்சென்ற முப்படைகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

விலகிச்சென்ற முப்படைகளின் உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2020 | 4:01 pm

Colombo (News 1st)  சேவையிலிருந்து விலகிச்சென்ற முப்படைகளின் உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் கீழ், அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் படையிலிருந்து சட்ட ரீதியாக விலகவோ, மீண்டும் இணைந்துகொள்ளவோ முப்படைகளின் உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிச்சென்ற முப்படையின் உறுப்பினர்களுக்காக மாத்திரமே இந்த பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்