மாதம்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவல்

மாதம்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவல்

மாதம்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவல்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2020 | 5:03 pm

Colombo (News 1st) கொழும்பு – கிராண்ட்பாஸ், மாதம்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.

மாதம்பிட்டி குப்பை மேட்டில் நேற்றிரவு தீ பரவ ஆரம்பித்துள்ளது.

நிலவும் அதிக வெப்பம் காரணமாக தீ பரவல் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டது.

கொழும்பில் 22 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளமையால், தீயைக் கட்டுப்படுத்த தேவையான நீரை பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த இராணுவம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிகளைப் பெற எதிர்பார்த்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்